India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பெரம்பலூர் மங்களமேடு அருகே உள்ள அத்தியூரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம்(22), ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(26), கீழக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரகுமான்(28), ஆகியோரை கைது செய்து 18 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் பெரம்பலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <
பெரம்பலூர் நகரிலுள்ள பெரிய தெற்குத் தெருவைச் சேர்ந்த பாரதி (33) என்பவர் நேற்று (டிச.29) அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நிகழ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்
பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று (டிச.29) இரவு குளிரால் தவித்த ஆதரவற்ற சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை அளிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் லயன்ஸ் கிளப் தலைவர் சண்முகதேவன், செயலாளர் டாக்டர் சதீஷ், பொருளாளர் தேவா, முன்னாள் பொருளாளர் வினயா பாலகிருஷ்ணன், உறுப்பினர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கினார்கள்.
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்துமிடத்தில், காவலர் சௌந்தர்ராஜனுகுச் சொந்தமான காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று (டிச.29) அதிகாலை எதிர்பாராதவிதமாக சௌந்தர்ராஜனின் காா் தீப்பற்றி எரிந்துள்ளது. அந்தக் காரின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான 2 காா்களும் தீப்பற்றி எரிந்ததில் 3 காா்களும் முற்றிலும் எரிந்து சேதமாகின.
கரூர் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் தனியார் மஹாலில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், திரைப்பட இயக்குநர் பாண்டியராஜன், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணனுக்கு கல்விச் சேவையைப் பாராட்டி இன்று தமிழ் மகுடம் விருது 2024 வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூர் நகரம் முழுவதும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் வேறொரு முக்கிய குற்றவாளி இருப்பதாக கூறி ‘யார் அந்த சார்’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரம்பலூர் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கண்ணன் (18). பெரம்பலூர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி வெளியே சுற்றி வந்ததை அவரது தாயார் கண்டித்ததால், மனமுடைந்த கண்ணன் களைக் கொல்லி மருந்து அருந்தியதில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ், 16 விவசாயிகளுக்கு ரூ.11,49,112 அரசு மானியத்தில் விசை களையெடுக்கும் கருவியும், தோட்டக்கலைத் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.8,000 மானியத்தில் மண்புழு உர படுகைகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று வழங்கினார்.
பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில வருடங்களாக பைக் திருட்டில் ஈடுபட்ட மங்களமேடு, அத்தியூரை சேர்ந்த முகமது இப்ராஹிம் (22), ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(26), கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ரகுமான் (28), சேலம், சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(25 ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து, ரூ.15 லட்சம் மதிப்புள்ள 18 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.