Perambalur

News January 2, 2025

பெரம்பலூரில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, கல்யாண் நகரில் சுரேஷ் மற்றும் யோகேஷ் சர்மா என்பவர்களது எலக்ட்ரானிக் கடையிலும்,சக்தி என்பவரது போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ‌.27000 பணமும் ரூ.2,50,000 மதிப்புள்ள பொருட்களை நேற்றிரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2025

பெரம்பலூர்: தொட்டில் குழந்தை திட்டத்தில் பணிபுரிய அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். விண்ணப்பத்தினை http://perambalur.nic.in எனும் இணையதளத்தின் வழியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இது குறித்த கூடுதல் விவரங்களை 04328-275020 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 2, 2025

பெரம்பலூர்: 151 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு

image

பெரம்பலூரில் கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த 567 சாலை விபத்துகளில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். 634 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2023-ம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இறப்பு குறைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதுமாக கடந்த ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மொத்தம் 2,31,048 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

பெரம்பலூர்: விவசாய மானியத்திற்கான அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மின்மோட்டார் பம்ப்செட்களை செல்போன் மூலம் இயக்கும் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெற வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9842470358, 9944850423 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 2, 2025

பெரம்பலூரில் திருவள்ளுவர் சிலை வைக்க கோரிக்கை

image

பெரம்பலூர் தமிழ்ச்சங்கத்தினர், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் திருவள்ளுவர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்கும் மனு கொடுக்கப்பட்டுத்துள்ளனர்.

News January 1, 2025

பெரம்பலூரில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்

image

பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் பகல் பத்து நிகழ்ச்சியின் 2ஆம் நாளான இன்று பெருமாள், பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோவில் மங்கள வாத்தியம் முழங்க மூன்று முறை கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

News January 1, 2025

விசுவக்குடி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் அமைந்துள்ள அணையானது கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

News December 31, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், கருத்தரங்கம், கவியரங்கம் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வள்ளுவரின் சிலை இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று (டிச.30) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. வான்புகழ் கொண்ட வள்ளுவனின் புகழ் பரவட்டும், புத்தொளி பிறக்கட்டும்

News December 31, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யாரேனும் சாலையில் 2 அல்லது 4 சக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் நடுவே நின்று கேக் வெட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 30, 2024

தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு.

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (30.12.2024) நடைபெற்றது. ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் , மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!