Perambalur

News January 13, 2025

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனம் பாடாலூரில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், முதல்வர் பணியிடம் காலியாக இருந்த நிலையில்,மதுரைமாவட்டஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றிய முனைவர் ராமராஜ் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பலர் வாழ்த்து தெரிவித்தனர் தெரிவித்தனர்.

News January 13, 2025

பெரம்பலூர்: எலக்ட்ரானிக் கடையில் திருட்டு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூரைச் சேர்ந்த வெங்கடேசன்(35) என்பவர் பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையத்தில் எலக்ட்ரானிக் பொருள்  விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையின் பூட்டை உடைத்து நேற்றிரவு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் டிவி,கிரைன்டர்,மிக்ஸி மற்றும் ரூ.10,000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News January 13, 2025

சாலைவிதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

image

சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரையில் இன்று (13.01.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார், மற்றும் சாலை விதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

News January 13, 2025

பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 76 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 76 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

News January 13, 2025

பெரம்பலூர்: போகி பண்டிகை கொண்டாட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குமாதவிரோட்டில் வசிக்கும் மக்கள் பொங்கலின் முதல் நாளான இன்று போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போகி என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பழைய பொருட்களை எரித்து, அருகில் இருக்கும் வீட்டாருக்கு போகியின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தைகள் அதனை கண்டு மகிழ்ந்தனர்.

News January 12, 2025

பெரம்பலூரில் மாநில அளவிலான மாரத்தான்

image

பெரம்பலூரில் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News January 12, 2025

பெரம்பலூர்: தீவனப் பயிர்கள் விதை உற்பத்தி குறித்த இலவச பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் தீவனப் பயிர்கள் விதை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு மே.22ஆம் தேதி நடக்க உள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயரை 04328- 293251 என்ற எண்ணில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஷேர் பண்ணுங்க.

News January 12, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன நெரிசல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜன.11) காலை முதலே வாகன நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் விழா காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பெரம்பலூரில் அதிக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மக்கள் இரு சக்கர வாகனங்களிலும் மற்றும் கார்களிலும் தொடர்ந்து வருவதால் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News January 12, 2025

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் ரூ.10,000 பரிசு

image

பெரம்பலூரில் ஜன.31 முதல் பிப்.9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.10000 பரிசு தொகையாக வழங்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். மாணவர்களின் வாசிக்கும் திறனையும், எழுத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஊக்குவிக்கவும் இதன் நேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

image

மத்திய பிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அம்பிகாபதி சீனியர் நீச்சல் போட்டியிலும், இதே போல் மாற்றுத்திறனாளி ஜீவா சப்-ஜூனியர் நீச்சல் பிரிவிலும் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இவர்களை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

error: Content is protected !!