Perambalur

News January 4, 2026

பெரம்பலூர்: மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் சி.ஐ.டி.யு அலுவலகத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளை செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த (ஜன.1)முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட கோரி, வருகின்ற 7-ஆம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 4, 2026

பெரம்பலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 4, 2026

பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 4, 2026

பெரம்பலூர்: முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

image

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் மார்கழி மாதம் பௌர்ணமியையொட்டி நேற்று(ஜன.3) மகா தீபம் , சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைப்பெற்றது. இதில் பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் காண்பித்து பொதுமக்கள் வழிபட்டனர்.

News January 4, 2026

பெரம்பலூர்: தாயுமானவர் திட்டம் மூலம் ரேசன் பொருள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று, ரேசன் பொருட்கள் வழங்கும்” தாயுமானவர்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்று (ஜன-4) முதல் 3 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

பெரம்பலூர்: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

பெரம்பலூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>>, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 4, 2026

பெரம்பலூர் மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ மொத்த பரப்பளவு – 1,757 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,675 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 82 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,86,073
▶️ வருவாய் கோட்டம் – 1
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 152
▶️ கிரம பஞ்சாயத்து – 121
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 2
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News January 4, 2026

பெரம்பலுர்: ரூ.64,000 சம்பளம்; நாளை கடைசி நாள்!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் வட்டத்தில் (4892), குன்னம் வட்டத்தில் (5049), வேப்பந்தட்டை வட்டத்தில் (4793), ஆலத்தூர் வட்டத்தில் (4053) நபர்கள் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான ரேஷன் குடிமை பொருட்கள் இன்று (04.01.2026), நாளை (05.01.2026) மற்றும் (06.01.2026) ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

பெரம்பலூர்: புதிய மாவட்ட செயலாளர் அறிவிப்பு

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளராக ரத்தினவேல் அவர்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இதற்கு முன்பு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்த கிருஷ்ணகுமார் என்பவரை, பெரம்பலூர் மேற்கு மாவட்ட புதிய செயலாளராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!