India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை செங்குணம் பிரிவுசாலை அருகில் நேற்று (ஏப்ரல் 4) திருவண்ணாமலையிலிருந்து திருச்சி எடுத்துச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் ஏற்றி வந்த மினி வேன் பின் டயர் வெடித்து ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த கல்வி அலுவலர் ஓட்டுனரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது. அல்லிநகரம் அருகே வட்டாட்சியர் தேன்மொழி தலைமையிலான குழுவினர் நேற்று(ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஷாபருல்லா என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.80,000 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அப்பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அசூர கிராமத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே நேற்று(ஏப்.4) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.3) காலை பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தணிக்கை குழுவினர் உடனடியாக ரூ.51,000 மதிப்பிலான 340 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அரசு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று(ஏப்.3) பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். எம்எல்ஏ, அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என தகவல்.
தேர்தலில் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் வானொலி திடலில் நிறைவுற்றது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று (ஏப்ரல் 2 ) மாலை 7 மணி அளவில் பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 அன்று நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உட்பட தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட 12 வகையான ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.