Perambalur

News April 10, 2024

தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை

image

மக்களவைத் தோ்தல் விதிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில், 24 மணி நேரமும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தொலைபேசி மூலமாக 19 புகாா்களும், சி-விஜில் செயலி மூலமாக 7 புகாா்களும் பெறப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உடனுக்குடன் தீா்வு காணப்பட்டுள்ளது.

News April 9, 2024

பெரம்பலூர்: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்!

image

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் புறவழி சாலையில் இன்று காலை 10:50 மணியளவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லாமல் ஓட்டுநர்கள் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2024

பெரம்பலூர்: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரமனை கிராம பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், நேற்று(ஏப்.8ம் தேதி) மாலை 4 மணி அளவில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

News April 8, 2024

வேப்பந்தட்டை பகுதியில் அணிவகுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பகுதியில் நேற்று(ஏப்.7), மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய துணை காவல் படையினர், காவல் கண்காணிப்பாளர் ஹேம் ராம் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

News April 8, 2024

பெரம்பலூர்: வட மாநில காவலர் உயிரிழப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் புரமோத் குமார் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்தார். இவர் ஏப்.3 அன்று பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்தபோது, பின்னால் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த பைக் புரமோத்குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்த புரமோத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

News April 7, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழையா..?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

பெரம்பலூர்: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

பெரம்பலூர் அருகே சனி மகா பிரதோஷம்

image

பெரம்பலூர் நகரம், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று(ஏப்.6) மாலை 6:30 மணி அளவில், சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஈசன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News April 6, 2024

குழந்தைக்கு பெயர் சூட்டிய விசிக தலைவர்

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய காந்தி சிலை அருகே இன்று காலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விசிக நிர்வாகியான துறைமங்கலம் வழக்கறிஞர் மணிமாறன் – பிரியதர்ஷினி ஆகியோரது பெண் குழந்தைக்கு வெற்றிச்செல்வி என பெயர் சூட்டினார்.

News April 6, 2024

பெரம்பலூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!