Perambalur

News May 6, 2024

+2 RESULT: பெரம்பலூரில் 96.44% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 96.44% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.51 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 97.37 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

பெரம்பலூர்: போராட்டம் குறித்த விளக்க வாயிற் கூட்டம்

image

பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ சங்கம் சார்பில் நேற்று(மே 5) வாயிற் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திர குமாரை கண்டித்து வரும் 14ம் தேதி மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

News May 5, 2024

பர்னிச்சர் கடை குடோனில் தீ விபத்து

image

பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பர்னிச்சர் கடையின் குடோனில் இன்று 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டில், டைனிங் டேபிள் சோபா, ஃபர்னிச்சர் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இடத்திற்கு விரைந்து வந்த,  தீயணைப்புத் துறை 2 மணி போராடி தீயை அனைத்து வந்தனர். 

News May 5, 2024

முதியவர் மீட்டு சிறப்பு இல்லத்தில் சேர்ப்பு

image

பெரம்பலூர் வட்டம், துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் சுமார் 75 வயதுடைய பெயர் மற்றும் முகவரியையும் சரியாக சொல்ல தெரியாத ஆதரவற்ற முதியவர் ஒருவரை நேற்று மாவட்ட சமூக நலத்துறை மூலம் மீட்டு
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம்,
உதிரம் நாகராஜ், மகேஸ்குமரன் ஆகியோர் உதவியுடன் சிறப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

News May 4, 2024

சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் (மே 3) நேற்று மாலை 6 மணி அளவில் திராவிட கழகத்தின் சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். பொதுக் கூட்டத்தில் திராவிட கழகத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்( ம) தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

News May 4, 2024

பெரம்பலூரில் கூட்டு திருமண விழா

image

பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நேற்று(மே 3) மாவட்ட அரிமா சங்கம் சார்பில் தலைவர் பாபு தலைமையில் சாசன தலைவர் இராஜாராம் முன்னிலையில் 5 ஜோடி மணமக்களுக்கு கூட்டு திருமண விழா நடைபெறுகிறது. பெரம்பலூர் ரோவர் கல்வி குழும தலைவர் வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரிமா சங்கம் செயலாளர்கள் சிவராஜ், சுப்ரமணியன், பொருளாளர் காசி விஸ்வநாதன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

பெரம்பலூர் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா!

image

சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. இதனால் கடலுக்கடியில் இறந்த உயிரினங்கள் புதைபடிவமாக மாறிப் போயின. பூக்கும் தாவரம் தோன்றுவதற்கு முந்தை காலத்தை சேர்ந்த 18 மீட்டர் நீளம் கொண்ட மரம் கல்லுருவமாகியுள்ளது.

News May 3, 2024

மனைவி இறந்து தூக்கம் தாளாமல் கணவன் தற்கொலை

image

பெரம்பலூர், கொளப்பாடி கிராமத்தில் சேர்ந்த நடராஜன்- சோலையம்மாள் தம்பதி. சோலையம்மானுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின் வலி தாங்க முடியாமல் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த கணவர் நடராஜன் துக்கத்தில் மருந்து குடித்து இறந்து விட்டார். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.

News May 3, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பெரம்பலூர் மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

News May 3, 2024

வேப்பந்தட்டை: நீர் உறிஞ்சி கிணறுகள் ஆய்வு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் 3 நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் நேற்று(மே 2) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!