India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 119
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
4. வயது: 21-28 (SC/ ST-33, OBC-31)
5. கல்வித் தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) அதிக மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த ‘பெரும்புலியூர்’ தான் இன்று ‘பெரம்பலூர்’ ஆக மாறியுள்ளது. இங்கு பராமத்து பணிக்காக குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்திய பொழுது பல நூறு ஆண்டுகள் முன்னால் கடலில் வாழ்ந்த உயிரனங்களின் படிமம் கண்டெடுக்கபட்டது. இதனால் ஒரு காலத்தில் பெரம்பலூர் கடல்பகுதியாக இருந்து இருக்கலாம் என ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது<

பெரம்பலூரை சேர்ந்த நவீன் குமார் (25) என்ற இளைஞர், தஞ்சாவூர் விளார் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பிரியங்கா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நவீன் குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து 40 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்ட கிராமப் புறங்களில் உயர்தர இணைய சேவை வழங்க ‘பாரத்நெட்’ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் (DLFP) தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 14-க்குள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்குகள், காளான் – தேனி வளர்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அனிதா நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். புதிய எஸ்பி-க்கு காவல்துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அனிதா நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். புதிய எஸ்பி-க்கு காவல்துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.