Perambalur

News May 15, 2024

30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

பெரம்பலூரில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்ட நிலையில், 94.82 % தேர்ச்சி அடைந்து மாநிலத்தில் 6-வது இடம் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி , அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 79 மேல் நிலைப் பள்ளி உள்ள நிலையில், 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மே.15) கோடை மழை பொழிந்து வருகிறது. நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கத்தால் தவித்துக் கொண்டிருந்த பெரம்பலூர் மக்களுக்கு, இந்த மழை ஆறுதல் அளித்துள்ளது. மேலும், இன்னும் சில நாட்களுக்கு இப்பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 15, 2024

பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்ய பரிந்துரை

image

பெரம்பலூர் மாவட்ட
வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெறவும் விவசாயிகள் தக்கைப் பூண்டு, மணிலா, அகத்தி, சனப்பை, கொழிஞ்சி, நரிப்பயறு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் கீதா இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்ய பரிந்துரை

image

பெரம்பலூர் மாவட்ட
வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெறவும் விவசாயிகள் தக்கைப் பூண்டு, மணிலா, அகத்தி, சனப்பை, கொழிஞ்சி, நரிப்பயறு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் கீதா இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

மைய நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

image

பெரம்பலூர் மாவட்டம் மைய நூலகத்தில் TNPSC – குரூப் 4 மாதிரி தேர்வு வரும் மே -17 அன்று மதியம் 1 முதல் 4 மணி வரை மாவட்ட நூலகம் மற்றும் திருச்சி NR IAS அகாடமி சார்பில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்தத் தேர்வுக்கு எந்த கட்டணமும் கிடையாது என மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

கவுள்பாளையம் அ.மே.நி.பள்ளி +1 ல் 100 % தேர்ச்சி

image

தமிழகத்தில் இன்று +1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 தேர்வு எழுதிய 45 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி யோகேஸ்வரி பள்ளி அளவில் அதிகபட்சமாக 445 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
+1 ல் 100 % தேர்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

News May 14, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

பெரம்பலூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 5ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 91.16% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.59சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.54 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 14, 2024

+1 RESULT:பெரம்பலூர் 94.82% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 92.89% பேரும், மாணவியர் 96.75% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.82% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 6வது இடத்தை பிடித்துள்ளது.

News May 14, 2024

பெரம்பலூரில் வாகன பரிசோதனை

image

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று காலை 10- மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!