India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

“அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மற்றும் பாரத் நெட் ஒர்க் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதிகளில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டார்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நாளைக்குள்ளாக (ஜன.14) anfinet.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இங்கு அறிந்துகொள்ளலாம்.
1.பெரம்பலூர் (தனி) – எம். பிரபாகரன் – 9786660160 – mlaperambalur@tn.gov.in
2.குன்னம் – எஸ்.எஸ்.சிவசங்கர் – 9443142600 – mlakunnam@tn.gov.in
இதனை உங்களது உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப் பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு க்ளிக் செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், மாதாந்திர திறனாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மிருணாளனி உரையாற்றிய போது, இனி மாவட்டத்தில் கர்ப்பக்கால மரணங்கள் எந்தவொரு மருத்துவமனைகளில் நிகழாதவாறு, கர்ப்பிணி பெண்களை பேணி காத்து, அவர்களுக்கு உரிய சிகிச்சையுடன் கூடிய வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tna<
Sorry, no posts matched your criteria.