India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்பொழுது மார்ச் மாதத்தில் இருந்து வரலாறு 100 % மேல் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இங்கு நகர்ப்புறம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சாலையோரம் மற்றும் சிறு வியாபாரிகள் தர்பூசணி பழங்களை அண்டை மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்காக குவித்துள்ளனர். பொதுமக்களும் வெயிலை சமாளிக்க தர்பூசணி போன்ற பழங்களை அதிகமாக வாங்கிச் செல்வதால் விலை உச்சத்தில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வரும் ஏப்ரல் 29/4/2024 முதல் 13/5/2024 வரை நடைபெறவுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 18-வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விளையாட்டு அரங்கில் நுழைவு கட்டணமாக ரூ:200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 7401703516 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகன் சக்திவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சொத்து தகராறில் தந்தை என பாராமல் குழந்தைவேலுவை அடித்துக்கொன்றார் . இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்கு போடாமல் காலம் கடத்தியதாக கைகளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமியை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
பெரம்பலூர் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று(ஏப்.25) பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து மோட்டார் வாகனச் சட்டம் 1988 – 199A பிரிவு படி, 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இது போன்று அலட்சியமாக உள்ள பெற்றோர், பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர், சிறுவாச்சூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். 1000 வருடம் பழமையான இக்கோவிலில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்க தேர் உள்ளது. இக்கோவிலின் சிறப்பாக, நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அரிசியை எடுத்து வந்து அதை கோவிலில் ஊரவைத்து, உரலில் இட்டு இடித்து மாவிளக்கேற்றுவர். இதற்கு உதவ ஆட்களும் உள்ளனர். பல புராணகால கதைகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.
பெரம்பலூர் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கான மத்திய அரசு திட்டத்தின் கீழ், கால்நடை நலன் நோய் கட்டுப்பாட்டு திட்டம் (LHDPC) மூலம் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று(24-4-2024) முதல் மே 23 வரை அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்காக 700 டோஸ் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முகாமினை பன்றி வளர்ப்போர் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குன்னம் வட்டம் மேலமாத்தூர் அருகே வரிசைபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ கல்வி குழுமத்தின் புதிய அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(ஏப்ரல் 24) மாலை பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் கல்விக் குழுமத்தில் நிர்வாக தலைவராக ராஜாராமன் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலராக ராம்பிரசாத் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் நிர்வாக அலுவலர்கள் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மத வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், பெரம்பலூரில் தலைமை அஞ்சலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு கடிதத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர். இந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.