Perambalur

News January 19, 2026

பெரம்பலூர்: அதிசய கோயில் பற்றி தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் ஏகாம்பரஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய கதிர்கள் நேரடியாக ஏகாம்பரேஸ்வரர் மீது விழும். உட்பிராகத்தில் 10 தூண்கள் உள்ளன அதனை சந்தன குச்சியால் தட்டினால் 10 வகையான ஒலிகள் எழும். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்கினால் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.

News January 19, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

பெரம்பலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

பெரம்பலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

பெரம்பலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

பெரம்பலூர்: தேவை இல்லாத CALL-க்கு இனி END!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 19, 2026

பெரம்பலூர் மாவட்ட முதல் ஆட்சியர் யார் தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம் 1995-ம் ஆண்டு செப்.30-ம் தேதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதன் பின் 1995 அக்.13-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக க.நந்த கிஷோர் பொறுப்பேற்றார். 1997ம் ஆண்டு மே 12-ம் தேதி வரை மாவட்டத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தனது பங்களிப்பைச் செலுத்தினார். தற்போது ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

பெரம்பலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

பெரம்பலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News January 19, 2026

பெரம்பலூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விரும்புவோர், வருகின்ற 20-ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை 8056010150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 19, 2026

பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் சிதைந்த உடலை கைப்பற்றி, இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2026

பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

News January 19, 2026

பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!