India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் சீனிவாசா செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் திருச்சி SRM பல்கலைக்கழகத்தில் மே 7 அன்று நடைபெற்ற உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளான கேரம் போர்டு, கால் பந்து ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் 2ம் பரிசு வென்றனர். அந்த மாணவர்களை நேற்று(மே 9) தனலட்சுமி சீனிவாச பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி பரிசு வழங்கினார்.
பெரம்பலூர், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் சுப்பிரமணி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவிழாவின் போது அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் செந்தில்குமார் தரப்பிற்கும் இவர் தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் சுப்பிரமணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 2015 – செப். 2021 வரை 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தனி தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஆக.31ம் தேதி கடைசி தேதி ஆகும். எனவே சான்றிதழ் பெறாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் பெரம்பலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ரூ.45 தபால் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட தபால் மூலமாக பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூர் கிராமத்தில் நேற்று(மே 8), சித்திரை மாதங்களில் 70 வருடங்களுக்கு மேல் விமர்சையாக கொண்டாடப்படும் அன்னக்கொடி திருவிழா மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு படையலிட்டு அன்னம் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி இன்று(மே 9ம் தேதி) தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி மே ஒன்பதாம் தேதி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கலெக்டர் கற்பகம் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள IOB வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமபுற (ம) நகர்புற பெண்களுக்கு சணல் பை தயாரிப்பு பயிற்சி மே 15 முதல் காலை 9:30 – 5:30 மணி வரை 13 நாட்கள் சணல் பை தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில்(18 – 45) வயது வரை உள்ள பெண்கள் தங்களது ஆதார், கல்வி சான்று (ம) புகைப்படத்துடன் பதிவு செய்து கொள்ள சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள IOB வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமபுற (ம) நகர்புற பெண்களுக்கு சணல் பை தயாரிப்பு பயிற்சி மே 15 முதல் காலை 9:30 – 5:30 மணி வரை 13 நாட்கள் சணல் பை தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில்(18 – 45) வயது வரை உள்ள பெண்கள் தங்களது ஆதார், கல்வி சான்று (ம) புகைப்படத்துடன் பதிவு செய்து கொள்ள சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூர் ஆகிய 3 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து மே 6 முதல் 20ம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் 20 ஆண்டுகளாக முன் பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று(மே 7) இரு குடும்பத்தினரும் நேருக்கு நேர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 10க்கும் மேற்பட்டோர் அரிவாள் வெட்டு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.