India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023-24ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் குன்னம் வட்டம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருது பெற்ற பள்ளிகளுக்கு நேற்று முதன்மை கல்வி அலுவலர் (கூபொ) பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை ரொக்க பரிசு விருதுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூரில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், எளம்பலூர் சாலை, நான்கு ரோடு, துறைமங்கலம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் (ம) பாதாள சாக்கடை குழாய் இணைப்புகளும் (ம) குழாய்களின் பழுது சீரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளை நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தி நகராட்சி பணியாளர்கள் மூலம் பணிகளை செய்து கொள்ள வேண்டும். வெளி ஆட்களை கொண்டு தன்னிச்சையாக செயல்படுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (ம) சென்னை பாவை பவுண்டேஷன் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்துக்குட்பட்ட பெரம்பலூர் கிழக்கு ஊ.ஒ.தொ. பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி மே.20 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பயிற்சியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் (ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூரில் ஆண்டுதோறும் மே மாதம் 30-ஆம் தேதி சர்வதேச திசு பன்முக கடினமாதல் தினமாக அனுசரிக்கப்படுவது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச திசு பன்முக கடினமாதல் தினத்தை முன்னிட்டு மே.30ஆம் தேதி இரவு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது. இதை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆலத்தூர் வட்டம் கொட்டரை ஊராட்சியில் நேற்று பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட பணி ஆணை குழு மற்றும் பெரம்பலூர் சிவம் அறக்கட்டளையும் இணைந்து பொதுமக்களிடையே ஒருங்கிணைந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இம்முகாமில் வழக்கறிஞர்கள் சிவம் அறக்கட்டளையின் நிறுவனர் ஊராட்சி மன்ற தலைவர் ஆலத்தூர் வட்டம் சிவம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, “தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள் என தரம் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் வாரம் ஒருமுறை கட்டாயம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஆங்காங்கே மழை பெய்து வந்த காரணத்தால் வெப்பநிலை குறைந்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் மே-30 ஆம் தேதியான இன்று வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்கீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
Sorry, no posts matched your criteria.