Perambalur

News June 21, 2024

பெரம்பலூர்: மாணவர்களுக்கு பாராட்டு

image

ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சாய்நிவேஷ் , ஹரிகிருஷ்ணன் மற்றும் உண்டு உறைவிட பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்றனர். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

News June 20, 2024

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(21.6.24) நடைபெறவுள்ளன என கலெக்டர் கற்பகம் அறிவித்துள்ளார். இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், https://tnprivatejobs.tn.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பித்து பங்கேற்குமாறு தெரிவித்துள்ளனர்.

News June 20, 2024

பெரம்பலூரில் ஆ .ராசாவிற்கு வரவேற்பு

image

எம்.பி யாக 6 வது முறையாக வெற்றி பெற்று மக்களவை கொறடாவாக நாளை(ஜூன்-21) 12 மணியளவில் பெரம்பலூருக்கு வருகைதரும் திமுக து.பொதுச்செயலாளர் ஆ.இராசாவை வரவேற்கும் விதமாக திருமாந்துரை டோல், மற்றும் பெரம்பலூர் 4 ரோடு பகுதியிலிருந்து மா.இளைஞணி ,மாணவரணி சார்பாக இருசக்கர வாகனபேரணி மூலம் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்றத் து.தலைவர் ஹரிபாஸ்கர் தெரிவத்துள்ளார்.

News June 20, 2024

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய டூ வீலர்கள் பறிமுதல்

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. அதனால் நேற்று புதிய பேருந்து நிலையம் உள்ளேயும் வெளியும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 32 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகமது அனிபா தலைமையிலான போலீசார்   பறிமுதல் செய்தனர்.

News June 19, 2024

பெரம்பலூர் அருகே கலெக்டர் விசிட்

image

பெரம்பலூர்: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஜூன் 19ம் தேதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News June 18, 2024

பெரம்பலூர் வருவாய் தீர்வாயம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4-தாலுகாவிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று (ஜூன்-18) நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் (தாலுகா வாரியாக) குன்னம்-107 மனுக்களும், வேப்பந்தட்டை -175 மனுக்களும், ஆலத்தூர்-48 மனுக்களும், பெரம்பலூர் – 51 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூன்-20, 21,25,27 ஆகிய நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. 

News June 18, 2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

image

பெரம்பலூரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளைவில் தொடங்கிய இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

News June 17, 2024

வேளாண் கண்காட்சி நிறைவு

image

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 3 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி (ஜூன் 16) நேற்றுடன் நிறைவடைந்தது. கண்காட்சியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள், சிறுதானியம் உள்ளிட்ட பாரம்பரிய விதையுடன் விவசாயிகளுக்கு அரசு வழங்கப்படும் திட்டங்கள் கூடிய 150 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேளாண் கண்காட்சியில் 30,000 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

News June 17, 2024

பெரம்பலூர்: நாளை கரண்ட் கட் ஆகும் இடங்கள்!

image

பெரம்பலூர் கோட்டம் எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஜூன் 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, திருப்பெயர்,செஞ்சேரி, கீழக்கரை, எசனை, மேட்டாங்காடு, புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News June 16, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் தேதி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 1433 ஆம் பசலிக்கான ஜமாபந்தி குன்னம் தாலுக்காவில் ஆட்சியர் தலைமையிலும் பெரம்பலூர் தாலுக்காவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் , வேப்பந்தட்டை தாலுக்காவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்காவில் சார் ஆட்சியர் தலைமையிலும் வரும் ஜூன்18 முதல் ஜூன்27 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். ‌‌

error: Content is protected !!