India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இன்று நாகர்கோவில் அடுத்த புத்தேரி பாலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1.55 லட்சம் ரூபாயை கணேஷ் என்பவரிடம் இருந்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது வரை நடத்திய பறக்கும் படை சோதனையில் ரூ.10.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித் குமார் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 5 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து மோகன்தாஸ் மற்றும் சத்யநாதன் ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் நடந்தது.
தேனியில் (21-3-2024) இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் காசி மாயன் தமமுகவின் மாவட்ட செயலாளர் பாலா ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள், தமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காரைக்காலில் இன்று இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏ நாஜிம், காங்கிரஸ் முன்னால் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிடோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணியில் ஆளுங்கட்சியினருக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரியில் ரெஸ்டோபார்வை திறந்து விட்டு கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் அவருடைய சாதனை என்று விமர்சனம் செய்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20 காவல்துறை அதிகாரிகள் மூலம் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மேலான தகவல்களுக்கு 9042822722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை நியோமேக்ஸ் என்ற மோசடி நிதி நிறுவனத்தின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நிதிநிறுவன மோசடி வழக்குகளை கையாள ஒற்றை சாராள முறையை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில், ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை 9655220100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பூவாத்தாள்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது 15 வயது மகள் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு உடலில் காயங்கள் எதும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.