India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர், ‘நிப்ட்-டீ’ கல்லூரியில் இந்தியா ‘லிம்கா’ புத்தக சாதனைக்காக, சுவரில் தேர் கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், ‘நிப்ட்-டீ’ கல்லுாரியில், ‘லிம்கா’ சாதனைக்காக, சுவரில் தேர் கோலம் வரையப்பட்டுள்ளது. கையை எடுக்காமல், தொடர்ந்து வரையும் தேர் கோலம், இந்தியா ‘லிம்கா’ புத்தக சாதனைக்காக வரையப்பட்டதாக கல்லுாரி நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி இன்று(மே 9ம் தேதி) தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.
தருமபுரி நகராட்சி உழவர் சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று(மே 8) இந்த சந்தையில் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளிடம் அரசு முதன்மைச் செயலாளர் குறைகளை கேட்டு அறிந்தார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையில் ஸ்ரீலஸ்ரீ எம்பெருமான் ஈஸ்வர சித்தர் ஆலயத்தில், பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவந்த 97 வயதான ஸ்ரீ சுருளி சித்தர் நேற்று(மே 8) இயற்கை எய்தினார். பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரின் குருநாதராக கூறப்படும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் மறைந்துள்ளார். சித்தர் இறந்த செய்தி பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையின்படி, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின்படியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அவசர நேர கதவுகள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என்பது குறித்து மே 11ம் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்று 3 ஆண்டுகள் முடிந்து, 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி நேற்று(மே 8)
புதுச்சேரி உள்துறை அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான நமச்சிவாயம் அவர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளயம்மன் கோயிலில் நேற்று(மே 8) சித்திரையை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு அங்காளயம்மன் சன்னதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவப்பு சீலை கட்டிக் பெண்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் முத்துப்பேட்டை செய்தியாளர்களிடம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவில் பணியிட நிரவல் செய்வதை தமிழக அரசு கைவிடல் வேண்டும். தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மட்டுமே இடமாற்றங்கள் அளித்திட வேண்டும். பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியினை கட்டாயமாக்கிட கூடாது என்றார்.
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை 3 லட்சத்து 99 ஆயிரத்து 148 குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது என மாவட்டம் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு மையத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா மின்னல் தாக்கியதால் ஒரு சில கேமராக்கள் இயங்காமல் பழுதானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆட்சியர் சங்கீதா தற்போது அனைத்து கேமராக்களும் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை உபகரணங்கள் பொருத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.