Tamilnadu

News March 24, 2024

நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கே.கே நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

ஈரோடு எம்.பி. தற்கொலை முயற்சி?

image

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒருவாரமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News March 24, 2024

திருப்பாச்சேத்தி அருகே கார் ஆட்டோ மோதி விபத்து

image

மதுரையிலிருந்து ஷேர் ஆட்டோவில் தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மதுரை நோக்கி ஆட்டோ சென்றபோது திருப்பாச்சேத்தி அருகே மாநாடு பாலம் அருகே சென்றபோது ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஆட்டோவில் மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

News March 24, 2024

உறியடி வெங்கட்ராமன் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

image

சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியில் உள்ள உறியடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நேற்று பங்குனி மாத சனிக்கிழமையையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News March 24, 2024

சுங்கச்சாவடியை மூடுக-வணிகர்கள்!

image

தமிழ்நாட்டில் உள்ள 10 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகின்ற சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என மதுரை பழம் உற்பத்தியாளர் சங்க தலைவர் திருமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் சுங்கச்சாவடி கட்டண உயர உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு வியாபாரிகள் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

சென்னையில் கிருஸ்தவர்கள் குருத்தோலை பவனி

image

சென்னயில் கிருஸ்தவர்கள் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும் பவனியாக சென்றனர்.

News March 24, 2024

விருதுநகர் அருகே ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான பேச்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

News March 24, 2024

திருச்சியில் தயார் நிலையில்…

image

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று (24.03.2024) நடைபெற உள்ளது.

News March 24, 2024

திமுக வேட்பாளர் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் மார்ச் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

News March 24, 2024

நாமக்கல்: மருத்துவ முகாமில் பொது மக்கள் பங்கேற்பு

image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சித்திரம் பவுண்டேஷன் வாசன் ஐ கேர் மணிபால் ஹாஸ்பிடல் சார்பாக இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ராஜேஷ் கார்த்திகேயன்,பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!