Tamilnadu

News January 2, 2026

செங்கல்பட்டு: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., திம்மாவரத்தில் உள்ள சுயம்பு சிவகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், வெகு ஆண்டுகளாக உள்ள திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த 2026-யில் திருமணம் செய்ய நினைப்பவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், காளியம்மனுக்கு வளையல் வைத்து வழிபட்டால் உடனே தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இதனை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 2, 2026

திருப்பூர்: கல்லூரி மாணவன் தற்கொலை

image

திருப்பூர், திருமுருகன்பூண்டியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவருடைய மகன் ரியாக் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனளிக்காதால் மனமுடைந்து நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News January 2, 2026

கோவை: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

ஆயக்குடியில் தெரு நாய் கடித்து இரண்டு பேர் காயம்

image

ஆயக்குடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது. இன்று மதியம் 1 மணி அளவில் இரண்டு பேரை நாய் கடித்து குதரி உள்ளது. காயமடைந்த அவர்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையை பெற்று வருகின்றனர். உச்ச நீதி மன்றம் உத்தரவுப்படி தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

News January 2, 2026

திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்கலாம். பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது தவறுகள் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய உதவும் என ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

News January 2, 2026

சேலம்: புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்

image

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புத்தாண்டு தினமான நேற்று மாலை வரை 11 ஆண், 8 பெண் என 19 குழந்தைகள் பிறந்தன. மேலும், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 குழந்தைகள் பிறந்தன. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ஒரே நாளில் மொத்தம் 29 குழந்தைகள் பிறந்துள்ளன.

News January 2, 2026

கரூர்: மரத்திலிருந்து விழுந்தவர் பரிதாப பலி

image

கரூர், தான்தோன்றிமலை செட்டிபாளையம் அருகே ரவிக்குமார் என்பவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இன்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News January 2, 2026

‘அரியலூர்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல் உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதுபோல உங்க ஊர பற்றி உங்களுக்கு வேறு பெயர்க்காரணம் தெரியுமா COMMENT பண்ணுங்க.

News January 2, 2026

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வேறு பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. உங்க ஊர் பெருமைய SHARE பண்ணுங்க..

News January 2, 2026

வேலைவாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட குழந்தைகள் நலன் துறையில் காலியாக உள்ள உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஜன.8-க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!