Tamilnadu

News March 25, 2024

கடலில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் பலி

image

கடலூர் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் கலையரசன் மகன் தினகரன் (17). பிளஸ்-2 மாணவரான இவர் தற்போது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் 24) தனது நண்பர்களுடன் நல்லவாடு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி பலியானார். இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

News March 25, 2024

திருவண்ணாமலை: பள்ளி பேருந்து விபத்து

image

திருவண்ணாமலை அவலூர்பேட்டை திண்டிவனம் புறவழிச்சாலையில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மற்றும் சரக்கு லாரி கார் ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

திண்டுக்கல்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே உள்ள CKCM நகர் பகுதியில் நேற்று வீரா கௌதம் என்ற இளைஞரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த வீரா கௌதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

News March 25, 2024

தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, வேலூர் எம்பி தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் பசுபதி உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசியர் ராம சீனிவாசன், பூங்கா முருகன் கோவிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 25, 2024

ராம்நாடு: வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

image

நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் சாலையில் வழிநெடுகிலும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செல்வவிநாயகர் ஆலயத்தில் வேட்பு மனுவை பூஜை செய்து தரிசனம் செய்தார். தொடர்ந்து படிவத்தில் அங்கேயே கையெழுத்திட்டார்.

News March 25, 2024

நெல்லையில் இன்று வேட்பாளர் உறுதி!

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் பல்வேறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 25) மாலைக்குள் வேட்பாளர்கள் திருநெல்வேலி தொகுதியில் அறிவிக்கப்படுவார்கள் என இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

News March 25, 2024

மகா சண்டியாகத்தில் பங்கேற்ற அமைச்சர்

image

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள அன்னை ஓம் பவதாரணி, ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில், மகா சண்டி யாகம் முதல் நாள் விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

News March 25, 2024

கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் குவிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக, பாஜக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிக அளவிலான கட்சி தொண்டர்கள் வருவார்கள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளருடன் 5பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!