Tamilnadu

News March 26, 2024

காஞ்சிபுரம்: தொடங்கியது 10ம் வகுப்பு தேர்வு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 66 தேர்வு மையங்களில் 15,953 மாணவ மாணவிகள் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 100க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட தயாராக இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

சான்றிதலுடன் கூடிய மணப்பெண் அலங்கார பயிற்சி

image

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மணப்பெண் ஒப்பனை அழகு கலை பயிற்சி மார்ச் 26, 27, 28 ஆகிய 3 தினங்களில் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது பூர்த்தி அடைந்த ஆர்வம் உள்ள பெண்கள் முன்பதிவு செய்து பங்கு பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8668100181, 7010143022, 9841336033 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News March 26, 2024

சேலத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 43,270 பேர்

image

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயிலும் 22,089 மாணவர்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 பேர் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 181 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

News March 26, 2024

மேடையில் கண்ணீர் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

image

திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் பேசிய பொழுது தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய போது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். இது கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

News March 26, 2024

நீலகிரியில் மோடிஜியா? 2 ஜியா?

image

நீலகிரி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன் நேற்று (மார்ச் 25) உதகையில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ‘நீலகிரி தொகுதியில் வெல்வது மோடிஜியா? 2 ஜியா? என்பது மக்களுக்கு தெரியும்’ என்றார்.

News March 26, 2024

குமரி வேட்பாளர்களின் சொத்து விவரம்

image

குமரி மக்களவை தொகுதியில் நேற்று(மார்ச் 25) வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் சொத்து விவரம். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.7.60 கோடி; அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.8.10 கோடி, மனைவி பெயரில்-ரூ.1.04 கோடி; நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரின் அசையும், அசையா சொத்துகள்- ரூ.4.50 கோடி, கணவர் பெயரில் – ரூ.1.14 கோடி.

News March 26, 2024

சென்னை: 70ஐ தாண்டும் வேட்பு மனு தாக்கல்?

image

சென்னையில் 3 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மார்ச் 20ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உற்சாகமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

News March 26, 2024

15306 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வை 15306 பேர் 71 தேர்வு மையங்களில். எழுதுகின்றனர் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியுடன் முடிகிறது தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் தேர்வுகளில் எவ்வித முறைகேடுகள் நடக்காத வண்ணம் நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

News March 26, 2024

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இன்று அதிமுகவின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சரும், தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று அதிமுகவின் ஆட்சிக்கால திட்டங்களை முன்வைத்து தீவிர வாக்கு சேகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதரவு

image

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சிபிஐஎம்எல் முடிவு செய்துள்ளது. நெல்லையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 25) இரவில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ரமேஷ் ஆகியோர் சென்று மாவட்ட செயலாளர் மைதீன் கானை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!