Tamilnadu

News June 6, 2024

திருப்பூர்: திருமூர்த்திமலையில் சிறப்பு பூஜை

image

உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் சன்னதியில் முருகனுக்கு உகந்த தினமான வைகாசி கார்த்திகையையொட்டி இன்று சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியர் சந்தன காப்பு ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

News June 6, 2024

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

image

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடை வைத்துள்ள உரிமையாளர்களிடம் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் மாநகர ஆணையாளர் காந்தி ராஜ் கூறுகையில், தேவனாம்பட்டினம் கடற்கரை புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ளதால் அங்கு கடை வைத்துள்ள அனைவரும் அதே பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார். 

News June 6, 2024

சசிகாந்த் செந்தில் எம்பி நன்றி தெரிவிப்பு

image

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அமோக வெற்றி பெற்று எம்பி ஆனார். இதையடுத்து அவர் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் மற்றும் நிர்வாகிகளை ஆவடியில் சந்தித்து நன்றி தெரிவித்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, வட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News June 6, 2024

யார் இந்த சசிகாந்த் செந்தில்

image

கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், 2019இல் ராஜினாமா செய்துவிட்டு தமிழக காங்கிரஸில் இணைந்த அவர், தமிழக காங்கிரஸ் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் அதன்பிறகு காங்கிரஸின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவரானார். தற்போது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.

News June 6, 2024

பிரேமலதா புகாருக்கு மாணிக்கம் தாகூர் தந்த பதில்!

image

விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் சற்று முன் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அவரது குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் பிரேமலதா பொய் குற்றச்சாட்டை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் பொய், புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

ராம்நாடு: மக்களுக்கு 101 மரக்கன்றுகள் வழங்கல்

image

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 27வது வார்டு செயலாளர் முனியாண்டி ஏற்பாட்டில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் 101 தென்னை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் காளிதாஸ், இராமநாதன், நகர துணைச்செயலாளர் நாகநாதன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பிரதீப், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 6, 2024

கந்துவட்டி கொடுமையால் தாய் மகள் தற்கொலை

image

சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரை சேர்ந்த ஜெய்சந்திரன் மனைவி ஞானபிரகாசி 48, மகள் சர்மிளா 24 இருவரும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவதூறாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியது தெரியவந்தது. தற்கொலைக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கந்துவட்டி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

News June 6, 2024

கிருஷ்ணகிரி: வீரப்பன் மகள் மும்முடங்கு… அசத்தல்

image

வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் நாதக சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,07,083 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலை விட 3 மடங்கு அதிகம் என்பதால் நாம்தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 6, 2024

திருவாரூர்: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

News June 6, 2024

தஞ்சை: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

error: Content is protected !!