Tamilnadu

News June 9, 2024

திருச்சியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது

image

திருச்சி அஞ்சல் துறை கோட்டத்தில் உள்ள அனைத்து புதுப்பிப்பு மையங்களிலும் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டு நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர்ந்து இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள்,ஆதார் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

News June 9, 2024

சர்வதேச அளவில் சாதித்த மாணவர்கள்

image

கோவையில் உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் பரவை ஆசான் காட்டுராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் வயது மற்றும் போட்டி பிரிவுகளில் 11 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். இதையடுத்து பரவையில் மாணவ மாணவியருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

News June 9, 2024

இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வகுப்பு

image

விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பு ( நேற்று 8) நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கி இயற்கை முறையில் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பேசினார். இதில் 30 மகளிர் சமுதாய களப்பயிற்றுனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

News June 9, 2024

தி.மலை மாவட்டத்தில் 267 தேர்வு மையம்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் இன்று குரூப்-4 தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் 73, 224 போ் எழுதுகின்றனா் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

News June 9, 2024

லோக் அதாலத்: ரூ.7.10 கோடி மதிப்புக்கு தீர்வு

image

ராமநாதபுரத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. இதில்
1,048 வழக்குகளுக்கு ரூ.7.10 கோடி தீர்வு தொகை வசூலானது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலாதேவி நீதித்துறை நடுவர்கள் நிலவேஸ்வரன், பிரபாகரன் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா பங்கேற்றனர்.

News June 9, 2024

கிருஷ்ணகிரியில் மக்கள் நீதி மன்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ.6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது. இதில்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

News June 9, 2024

பல்லடத்தில் ரத்ததான முகாம்

image

பல்லடம் வனம் அமைப்பு, திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் பொன்னி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறிவதற்கான இலவச மருத்துவ முகாம் ஆகியவை, வனாலயம் அடிகளார் அரங்கில் நேற்று நடைபெற்றது. ரத்ததான முகாமில், மொத்தம் 29 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.

News June 9, 2024

சிஐடியு அமைப்பு தின பேரவை கூட்டம்

image

திருவாரூர் தனியார் அரங்கில் சிஐடியு அமைப்பு தின பேரவை கூட்டம் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் (08.06.2024) நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது 500 ஆண்டு சந்தாவிற்கான தொகை 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிஐடியு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

நெல்லையப்பர்: 10 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் வருகை 13-ஆம் தேதி ஆணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் கலையரங்கில் 10 நாள் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நித்யஸ்ரீ மகாதேவன் இன்னிசை, வாசகி சொற்பொழிவு, “ப்யுசன் ” இசை, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரன் சொற்பொழிவு, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி கிராமிய இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 9, 2024

பாண்டி கோயில் அருகே ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்

image

மதுரை பாண்டி கோயில், குறிஞ்சி வனம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், நேற்று போலீசாரைப் பார்த்தவுடன் தப்பியோட முயன்றனர்.
அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், உலகநேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (28) என்பதும், வழிப்பறியில் ஈடுபட அனைவரும் ஆயுதங்களுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மனோகரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்

error: Content is protected !!