Tamilnadu

News June 9, 2024

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி

image

திண்டிவனம் அடுத்த வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஜயரங்கன்(27). புதிய வீட்டின் பாத்ரூமில் ஒயரிங் வேலை நடந்து வந்தது. நேற்று (ஜூன் 8) விஜயரங்கன் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்த டிரில்லிங் மிஷினில் இருந்த மின்சார ஒயரை கையில் சுற்றிய போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 9, 2024

மது போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

image

காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் வீடு கட்டும் பணிக்காக ராமு மற்றும் மனைவி ராதா  தங்கியிருந்தனர். நேற்று இரவு கணவன், மனைவி இருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமு, மனைவி ராதாவை பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராதா உயிரிழந்தார். இது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News June 9, 2024

செஸ் போட்டியில் சாதித்த கோவை சிறுவன்

image

தமிழக அளவில் மாநில ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவையைச் சேர்ந்த ஆகாஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கோவை வீரர் பட்டம் வெல்வது 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. ஆகாஷ் தனது திறமையால் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார். 2,251 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ள ஆகாஷ் விரைவில் ஐஎம் பட்டம் பெற முயற்சி செய்து வருகிறார்.

News June 9, 2024

மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக கோத்தகிரி-ஊட்டி இடையே பாக்கியா நகர் அருகே மலை சரிவில் நேற்று பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. அந்த பாறையை சாலை ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கும் வரை சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 9, 2024

ஆம்பூர்: ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

image

ஆம்பூர் அடுத்த வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 25 வயது தக்க இளைஞர் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News June 9, 2024

தூத்துக்குடி: ஒரே நாளில் 5 கோடி ரூபாய்க்கு தீர்வு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதன்படி மாவட்டம் முழுவதும் மற்றும் 13 அமர்வுகள் நடந்தது. இதில் மொத்தமாக 3,210 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2,285 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது. இதில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு நிவாரணம் மற்றும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

News June 9, 2024

கலசப்பாக்கம்: தந்தை அடித்து கொலை

image

கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் சேகர் என்பவர் வீடு கட்டுவதற்காக தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை எழுதி தருமாறு பிரச்னை செய்துள்ளார். பின்னர், முத்துவை சரமாரி தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News June 9, 2024

ஜூன் 11 – 20 வரை ஜமாபந்தி: கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலி ஜமாபந்தி ஜூன் 11 முதல் 20 வரை (சனி, ஞாயிறு, திங்கள் தவிர) தாலுகா வருவாய் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதில் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர் & https://cmhelpline.tnega.org/support/iipgcms/ என்ற இணையதளம், இ-சேவை மையம் மூலம் ஜூன் 11 முதல் 20 வரை பதிவேற்றம் செய்து உரிய தீர்வு பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

கோவை: வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆய்வு

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தினை கண்காணிக்கும் வகையில் சூயஸ் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் கசிவுகள் உள்ளிட்ட புகார்களை கேட்டறிந்து உடனடியாகத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தின் செயல்பாடுகளை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் டெல்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அலுவலர் அன்பரசு ஐஏஎஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News June 9, 2024

திண்டுக்கல்: வேட்பாளர்களுக்கு வந்த சோதனை

image

திண்டுக்கல் மக்களவை தேர்தலில் மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இதில் “நோட்டா-22, 120”,
ப.ச கட்சி நாச்சிமுத்து-4284, அ.இ.இ.மு.க தினேஷ்குமார்- 2434, சுயேச்சைகள் அங்குசாமி- 1290, அன்புரோஸ்-1012, ஆறுமுகம்-1089, சதீஷ் கண்ணா- 926, சபரிநாத் -1011, சுரேஷ்-1257, பழனிச்சாமி-949, முருகேசன் என்ற விஷ்ணு-2008, ராஜ்குமார்-4416 வாக்குகள் பெற்றனர். இந்த 11 பேரும் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்றனர்.

error: Content is protected !!