Tamilnadu

News June 9, 2024

சிவகங்கை: 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில்
காவல்துறையில் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாக 10 ஆண்டு, முதல்நிலை போலீசாக 5 ஆண்டுகள், தலைமை போலீசாக 10 ஆண்டு என 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும் ஏட்டுகள் 39 பேருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3 பேர் என 42 பேர் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
டிஐஜி துரை பதவி உயர்வு வழங்கினார்.

News June 9, 2024

மயிலாடுதுறை அருகே மக்களுக்கு எச்சரிக்கை

image

தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஒட்டி இன்று மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தல்.

News June 9, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

புதுக்கோட்டை வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கலியமூர்த்தி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன் படுகாயமடைந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News June 9, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

தமிழ்நாடு அரசு துணி நூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10,12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆண் பெண் ஸ்பின்னிங் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது
பயிற்சியினை httpஸ்:/tntextile.tn.gov.in/job// பதிவு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

கடலூர்: ரேஷன் கடைகள் 2 நாட்கள் இயங்காது

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிய விற்பனை முனைய இயந்திரத்தில் தரவு தளபணிகள் மேற்கொள்ள இருக்கிறது.மேலும் முழுநேர ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கி,அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதனால் 11.6.2024 மற்றும் 12.6.2024 ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்

News June 9, 2024

புதுவை அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்துக் படி உயர்வு

image

புதுவை அரசு ஊழியர்களுக்கான பல்வேறு படிகள் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஏப்ரல் மாதம் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. அதில் போக்குவரத்து படி (இடமாறுதல்) இடம் பெறாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது போக்குவரத்து படியும் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் சிவகுமார் நேற்று பிறப்பித்துள்ளார்.

News June 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

இராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறுவட்ட வாரியாக 18 சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் இந்த சிறப்பு முகாம் 11.06.2024 5 23.07.2024 வரை நடைபெரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

கரூர்: நடத்துநரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

image

குளித்தலை அருகே முசிறி பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநராக அசோக்குமார் பணிபுரிந்து வருகின்றார். வழக்கம்போல் கடந்த 2ஆம் தேதி அரசுப் பேருந்தில் குளித்தலையிலிருந்து கருங்களாப்பள்ளி சென்றுள்ளனர். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய இருவரும் மது போதையில் பஸ்ஸை மறித்து நடத்துனரை கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்துள்ளனர்.

News June 9, 2024

ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் உயிரிழப்பு

image

ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கம்பட்டி அருகே (ஜூன்-08) நேற்று இரவு 9 மணியளவில் பெரம்பலூரிலிருந்து துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த துறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத் ( 21) என்பவர் ஓடும் பேருந்திலிருந்து திடீரென கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News June 9, 2024

மதுரை:3 மாதத்திற்கு பின் நாளை குறைதீர் கூட்டம்

image

மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், வருகிற நாளை மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக மாா்ச் 16இல் அறிவிக்கப்பட்ட தோ்தல் நடத்தை விதிமுறைகள் 6.6.2024 அன்று முடிவுக்கு வருவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து சுமார் 3 மாதம் கழித்து குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!