India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கோகர்ணம் நத்தம் பண்ணையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர்லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆதனக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் மரியதாஸ் இறந்தவரின் உடலை புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு வார்டு கழக துணைச் செயலாளர் ஆர்.எஸ்.முருகன் இல்ல திருமண விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் நகரச் செயலாளர் இரா.சக்கரை, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ப.அன்பரசு, வார்டு செயலாளர் சண்முகம், அவைத் தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. 194 தேர்வு மையங்களில் 58,127 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். 12,740 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத சென்று வர 13 வழித்தடங்களில் 240 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மதுரை தங்கம் நகரை சேர்ந்தவர் பிரசன்னா(42). நகை கடையில் வேலை செய்து வரும் பிரசன்னா தனது மனைவியுடன் காரில் பெருநாழி சென்று விட்டு மீண்டும் இன்று ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி அருகே குல்லம்பட்டி பகுதியில் கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற பிரசன்னா சம்பவ இடத்திலேயே பலியானார். ம.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவாரூரை சேர்ந்தவர் பாபு(திமுக பிரமுகர்). இவர் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தனது மகனுடன் காரில் வந்துள்ளார். தஞ்சாவூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக மகன் கண்முன்னே வெட்டி கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி மண் மற்றும் மணல் கடத்தி வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை சின்னூர் கிராமத்திலிருந்து கந்திலியை நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி கந்திலி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்
திருவாரூரை சேர்ந்தவர் பாபு(திமுக பிரமுகர்). இவர் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தனது மகனுடன் காரில் வந்துள்ளார். தஞ்சாவூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக மகன் கண்முன்னே வெட்டி கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நல்லூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இன்று அசைவ உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவினை வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வுகள் இன்று ஆறு தேர்வு மையங்களில் உள்ள 13 தேர்வு கூடங்களில் நடந்தது. சுமார் 36 ஆயிரத்து 705 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 28,850 நபர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 7855 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வினை ஒட்டி 11 துணை பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒசூா் பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சரவணன் (46). இவரது சமூகவலைதள கணக்கிற்கு மாா்ச் 23ம் தேதி வந்த குறுந்தகவலில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி ரூ.8.59 லட்சத்தை முதலீடு செய்தாா். அதன்பிறகு எவ்வித பணப்பரிமாற்றமும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணன் கடந்த 7ம் தேதி இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.