India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் பல்வேறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 25) மாலைக்குள் வேட்பாளர்கள் திருநெல்வேலி தொகுதியில் அறிவிக்கப்படுவார்கள் என இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள அன்னை ஓம் பவதாரணி, ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில், மகா சண்டி யாகம் முதல் நாள் விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக, பாஜக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிக அளவிலான கட்சி தொண்டர்கள் வருவார்கள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளருடன் 5பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில், தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 25) அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு, வேட்பாளர் பாக்யராஜை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உரையாற்றினார்.
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தேனியைச் சேர்ந்த பாண்டியன்(40) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இம்மலையில் கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன், ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த சுப்பா ராவ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.வி. பாலகணபதி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி இன்று அதிகாலை வெள்ளியங்கிரி யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் திமுக போட்டியிட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளரை தேர்வுசெய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டு முடிவு எட்ட முடியாமல் அக்கட்சியினர் திணறி வருகின்றனர். இதனால் இன்று (மார்ச் 25) மாலைக்குள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கவில்லை எனில் திமுக தனது வேட்பாளரை தன்னிச்சையாக அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கே பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் இன்று (மார்ச் 25) தனது ஆதரவாளர்களுடன் வேட்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் பாஜக, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்றார். இதில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவையில் போட்டியிட இன்று அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.