India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட சில ஈமு கோழி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது அந்நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் ஏலத்திற்கு டி ஆர் ஓ தலைமை வகிக்கிறார். ஏல நிபந்தனைகளை மாவட்ட இணையதள முகவரி www.erode.tn.nic.in ல் அறியலாம்.

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான 2 நாள் முகாம் நடைபெற உள்ளது. ஜனவரி 3, 4 ஆகிய நாட்களில் தருமபுரி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற சேவைகள் நடைபெரும். மேலும் இதில் மக்கள் கலந்துக்கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளும்படி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாகை புதிய கடற்கரை சாலை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள் இலவச எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், ஆரி ஒர்க் ,பிளவுஸ் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பிற்கு மேல் படித்த 50 வயதுகுட்பட்டவர்கள் 6374005365 / 9047710810 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கரூர் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். voters.eci.gov.in இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம். பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்று ஜன. 3-ஆம் தேதி, நாளை ஜன. 4-ஆம் தேதி காலை 9 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் திருத்தம், மாற்றம் போன்ற பணிகளுக்காக மக்கள் இந்த இரு நாள்களில் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதை உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

முசிறி தண்டலை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் வலிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தண்டலை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தண்ணீரில் மயங்கி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். voters.eci.gov.in இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம். பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கிருபாகரன் (14). பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக நேற்று மாலை கீழ்பாதி ஏரிக்குச் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், மாணவன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தநிலையில் கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். <

சிவகங்கை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
Sorry, no posts matched your criteria.