Tamilnadu

News June 11, 2024

நீலகிரியில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு கூட்டம்

image

நீலகிரி பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இயல்பான அலுவலக பணிகள் மாவட்டம் முழுவதும் செயல்பட துவங்கி உள்ளன. இந்த வகையில் இன்று (ஜூன்11) நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி பங்கேற்றார்.

News June 11, 2024

தந்தை-மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

image

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜூன்.14-க்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி அதிகாரி அனில் குமார் ஆஜராகாததால் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

News June 11, 2024

வெகு சிறப்பாக தொடங்கிய பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா

image

போச்சம்பள்ளி அடுத்த கோடி புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மஹாமுரசனுக்கு கண் திறப்புடன் வெகு சிறப்பாக தொடங்கியது திருவிழா. விழாவின் முக்கியமான பரணை ஏறுதல் நிகழ்வு ஜூன் 12-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. அது சமயம் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் நாளை கலந்து கொள்ள நிர்வாக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

திருப்பூரில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் ராஜா ரா வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் மன செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

News June 11, 2024

ஒரே நாளில் 353 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 353 மனுக்கள் பெறப்பட்டதாக இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி

image

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம் 1433 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், 20 கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் 101 மக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்வில், வட்டாட்சியர் குருமூர்த்தி மண்டல வட்டாட்சியர் ஓம் சிவகுமாரன் மண்டல துணை வட்டாட்சியர் குப்புசாமி துணை வட்டாட்சியர் கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

வேலூர் மாவட்டத்தில் இன்றைய வெயில் அளவு

image

வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. மார்ச் மாதம் முதல் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று (ஜூன் 11) 98.8°F டிகிரியாக பதிவானது. மேலும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

News June 11, 2024

தொண்டு நிறுவனங்களுக்கு விருது

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த 
சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 
தமிழக அரசின் விருது பெற, அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை https://awards.gov.in, என்னும் இணையதளம் வழியாக 20.06.2024ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

புதுவையில் நாளை பள்ளிகள் திறப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நாளை கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கல்வித்துறை சார்பில் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாளை பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் தேவையான பொருட்களை வாங்கி தயாராகி வருகின்றனர்.

News June 11, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்ட விதிகளின்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!