India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு இன்று (ஜனவரி 03) இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ’செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு, வடகிழக்கு பருவ மழையில், 506 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதற்கு, அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளது. இந்தத் தொகை, பொங்கல் பண்டிகைக்கு முன், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்’ என்றனர்.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை மற்றும் எட்டிமடை பகுதிகளில் நேற்று இரவு மர்ம விலங்கு மோதியதில், இப்பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலா வரும் விலங்கு சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதைக் கண்டறிய தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் மற்றும் சின்னதாராபுரம் காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற பெரியக்காள் (66) மற்றும் குணசேகரன் 60 ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகே பயன்படாத ரயில் பெட்டியை நிறுத்தி, வண்ணமயமாக புதுப்பித்து நட்சத்திர விடுதி போல அறுசுவை விருந்தளிக்கும் ‘ரயில் பெட்டி உணவகம்’ திறக்க சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ரயில் பெட்டி உணவகம் புதுமையான அனுபவத்தையும், மன மகிழ்வையும் தரும் என்பதால், பொதுமக்களும், அறுசுவை உணவுப் பிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்த ஹரிணியும் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் கோகுலும் (21) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ஹரிணியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 30-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு நேற்று (ஜன.2) காதல் ஜோடி அரூர் போலீசில் தஞ்சமடைந்தனர்

விருதுநகர் வருவாய் கோட்டங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வருவாய் கோட்டங்களான சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் சப் கலெக்டர் ஆர்டிஓ அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அருகே உள்ள கொத்தாரி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுதாவின் ஒன்றரை வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுதா கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமி காணாமல் போயிருந்ததையடுத்து, தேடிப் பார்க்கையில் அருகில் உள்ள குளத்தில் சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், தொழில் தொடங்க ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.