Tamilnadu

News January 3, 2026

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்ச மாக 86 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

News January 3, 2026

தென்காசியில் நாளை வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

கிருஷ்ணகிரி: திருமணத்திற்கு ரூ.50,000 & 1 பவுன் நகை!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

அரியலூர் மாவட்டத்தின் மழை அளவு

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. அந்த வகையில் திருமானூரில் மட்டும் 4.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தின் சராசரி மழையளவு 0.6 மில்லி மீட்டர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

News January 3, 2026

செங்கை: இனி கண் முன்னே தப்பு நடந்தால்…, உடனே CALL!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலோ, பயணிக்கும் இடத்திலோ பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றால் உடனே எதற்கும் தயங்காமல் புகார் அளிக்க அந்தந்த பகுதிகளுக்கான நோடல் அலுவலர்களின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கான அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

News January 3, 2026

நெல்லை போலீஸ் அதிரடி அறிவிப்பு

image

‘திருநெல்வேலி மாநகர பகுதிகளில், இன்று (ஜன.3) அதிகாலை முதல் 15 தினங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டஙகள், மறியல்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவை நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் N.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அமைதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

காஞ்சி: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நீண்ட கால திருமணத் தடையா…? கவலை வேண்டாம்! 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நமது மாவட்டத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் திருமணத் தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி ரயில் நேரங்களில் புதிய மாற்றம்! இதோ லிஸ்ட்…

image

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE

error: Content is protected !!