Tamilnadu

News January 3, 2026

தடுப்பூசி முகாம்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வரும் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெற உள்ளன. காலை 6 மணி முதல் காலை 9:30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இம்முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

தருமபுரி: புத்தாண்டு நாளில் கோவில் திருட்டு!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, நேற்று இரவு பொம்மஹள்ளி மாரியம்மன் கோயிலில் புத்தாண்டு பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று (ஜன.02) காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின் உள்ளிட்ட சில பொருட்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 3, 2026

சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 3, 2026

கரூர் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 3, 2026

கரூர் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 3, 2026

திண்டுக்கல் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 3, 2026

கோவை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

வேலூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

image

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 3, 2026

குமரி: குளத்தில் மிதந்த ஆண் சடலம்…

image

காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்த நிலையில் நேற்று (ஜன.2) அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 3, 2026

தேனி: சுவர் இடிந்து விழுந்து பறிபோன 5 உயிர்கள்…!

image

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. இந்த வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.

error: Content is protected !!