Tamilnadu

News June 12, 2024

நோட்புக் வழங்கும் விழா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவ/மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் அடங்கிய கல்வி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

News June 12, 2024

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

image

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் தலைமையில் இன்று(ஜூன் 12) ’குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

News June 12, 2024

வருவாய் கிராம வழிகாட்டி பதிவேடு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

News June 12, 2024

விவசாய துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ.ஆலோசனை

image

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வேளாண்மைத் துறை மூலமாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து, வேளாண்மை துறை இணை இயக்குநர் உள்ளிட்ட வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை, தோட்டக்கலை ஆகிய துறை அலுவலர்களுடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆலோசனை நடத்தினார்.

News June 12, 2024

ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த தன்னார்வ அமைப்பினர்

image

பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது பிரேதத்தை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்றவராக இருந்துள்ளார்.அவரை இன்று (ஜூன் 13) மாலை சேலம் இருப்புப்பாதை காவலர் அருள்குமார், மை தருமபுரி அமரர் சேவை சார்பாக முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

News June 12, 2024

வந்தே பாரத் ரயில் மோதி: ஒருவர் பலி

image

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (26). இவர் நேற்று மாலை அரக்கோணம் முதலாவது நடைமேடையில் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தினேஷ் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

News June 12, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21ல் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் வேலை தேடுவோர் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள www. tnprivatejobs. tn. gov. in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324 223555 மற்றும் 97891 23085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு  ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு மனித சங்கிலியினை , மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

News June 12, 2024

திருப்பூரில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பைஜ் அகமது என்பவரது இல்லத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுக்களை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபுவிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

error: Content is protected !!