India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேரை கீரைத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அழகு, விக்னேஸ்வரன், இளம்பரிதி, பாரத், அப்பு, காமேஷ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவையும், மணி, கிளி கார்த்திக், செந்தில் முருகன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவையும் போலீசார் கைது செய்து, அரிவாள் கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த முறைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று அவரது உடல் ஏரியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட தாயப்பன் வட்டம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட சாலையில் குவிந்துள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் காவலராக பணிபுரிந்து வந்த அருளானந்த் என்பவர் குண்டாக்குடை அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து காளையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நன்னிலம் அருகே உள்ள கீரனூர் சோதனை சாவடியில், மன்னார்குடி மேல நாகை பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.12,85,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் மே 20ம் தேதி தொடங்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் இன்று(ஏப்.2) அறிவித்துள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் 22ம் தேதி காலையும், திருத்தேர் உற்சவம் 26ம் தேதியும் நடைபெறுகிறது.
கும்பக்குடியை சேர்ந்தவர் அன்புராஜ் இவர் தனியார் நர்சிங் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று நர்சிங் பள்ளியில் இருந்து திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து காரைக்குடியை நோக்கி
சரவணன் என்பவர் ஓட்டி சென்ற சரக்கு வேன் எதிர்பாராத விதமாக அன்புராஜ் மீது மோதியது. இதில் அன்புராஜ் பலியானார்.
கலவை தாலுகா, அல்லாளசேரி அருகே நேற்று(ஏப்.1) இரவு வேன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கீராம்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திவேல்(19) இன்று(ஏப்.2) உயிரிழந்தார். அவருடன் சென்ற சக மாணவர்கள் பிரகாஷ், ஹரிகரன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசியில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி காவல்துறையினர் மற்றும் கேரளா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு இன்று நடைப்பெற்றது. அணிவகுப்பானது தென்காசி புதியபேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக காட்டுபாவா பள்ளி அருகே நிறைவுபெற்றது.
பவானிசாகர் அருகேயுள்ள அக்கரை தடப்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (48) .கணவன் மனைவி இருவரும் கள்ளிப்பட்டி அருகே உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மொபட்டில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.