India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் சொத்து வாரியாக மட்டும் ரூ. 1, 800 கோடி வசூலாகி உள்ளது.
தென்காசி மக்களவைத் துறைக்கு வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான கொடி குறிச்சி யுஎஸ்பி அரசு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் வைக்கப்பட உள்ளது. அங்கு உள்ள பாதுகாப்பு வசதிகளை தேர்தல் பொது பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா, கலெக்டர் கமல் கிஷோர் இன்று (ஏப்ரல் 2) ஆய்வு செய்தனர்.
மக்களவைத் பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள், இன்று (2.4.2024) ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் மக்களவைத் தேர்தல் 2024-ல் முதல் முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவியர்கள் வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் அதிகாரிகள், பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் ம.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் புது காலனியில் இன்று (ஏப்ரல் 2) விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் பணிகளை பார்வையிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மலைச்சாமி. உடன் நில உரிமை மீட்க செயலாளர் ஆனந்தராஜ் மயிலம் தொகுதி பொருளாளர் தீயவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை மதுரை ஆதீனம் இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஏப்ரல் 2) நடந்தது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் தொகுதி தேரிருவேலி, கடம்போடை உள்ளிட்ட கிராமங்களில் இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் செய்தார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் கல்வி உதவித்திட்டம், அரசு பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணம் உள்ளிட்ட திட்ட பயன்கள் குறித்து அமைச்சர் பேசினார். காதர்பாட்ஷா பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ உள்பட பலர் உடன் சென்றனர்
புவனகிரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜூ, தனபதி ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பேரணி துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக 100% சதவீதம் வாக்களிப்போம் என முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது. இதில் வருவாய்துறையினர், மகளிர் சுய உதவி குழுவினர், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இன்மை காரணமாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 116.20 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லை. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 511 கனஅடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.