India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் ராமாயி அம்மாள் (79). மாற்றுத்திறனாளியான இவா் நேற்று முன் தினம் வடகரை சாலையை கடக்க முயன்றாா். அப்போது எதிரே வந்த காா் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுப்ரமணி மீது ஒரு பெண் காவலரின் தாய் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புதுச்சேரி டிஜிபி உடனடியாக உட்புகார் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எஸ்பி சுப்ரமணி, பெண் காவலருக்கு அனுப்பிய மெசேஜ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுப்ரமணி மீது ஒரு பெண் காவலரின் தாய் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புதுச்சேரி டிஜிபி உடனடியாக உட்புகார் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எஸ்பி சுப்ரமணி, பெண் காவலருக்கு அனுப்பிய மெசேஜ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் சேர்ந்தவர் காருண்ய கண்ணன் மகள் காவியா ஸ்ரீ (13). எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி. காவியா ஸ்ரீ நேற்று இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவி எதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ? என்பதைப் பற்றி சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க<

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா ஜன.14ல் மதுரை மாவட்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெறுகிறது. அன்று காலை 8:00 மணிக்கு மதுரை சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு பேருந்து மூலம் சத்திரப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பெண் டிச.9ம் தேதி 4 பவுன் நகையுடன் மாயமானார். இதுகுறித்து கணவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அப்பெண் மார்த்தாண்டத்தில் உள்ள லாட்ஜில் அருமனையை சேர்ந்த 30 வயது தனது காதலுடன் இருந்துள்ளார். போலீஸ் வந்ததும் காதலன் தப்பியோடினார். விசாரணையில் மிஸ்டுகால் மூலம் அவருடன் பழக்கம் ஏற்பட்டதாக பெண் போலீசாரிடம் கூறினார். தப்பியோடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு,தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.