India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்படும் 240 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இவைகள் மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(ஏப். 3) பார்வையிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோயில் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் நீர் மோரை அவர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார். கடந்த 1-ந் தேதி ஊருக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் திருடு போயுள்ளது.
பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வேளாண்மை துணை அலுவலர் மரியசரிராஜன் , வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் நேற்று இடுபொருள் விற்றதற்கான பணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது மரியசரிராஜனை கோவிந்தராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் அளித்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விநாயகர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தேர்தல் பொதுத்தேர்வுகள் ஹர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 தேவைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
நெல்லை அதிமுக மாநகர செயலாளர் தச்சை கணேசராஜா இன்று (ஏப். 03) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பி.எஸ்.எஸ் திரையரங்கம் அருகில் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணிக்கு தருமபுரி நகர பகுதிகளில், பாமக கட்சி தலைவர் அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். இதில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், மற்றும் கட்சி நிறுவனர் ஏராளமான கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுயேட்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ராமநாதபுரத்தில் இன்று
(ஏப்ரல் 3) பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இ.எம்.டி. கதிரவன், ஜி.பி.எஸ்.நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேர்தலில் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் வானொலி திடலில் நிறைவுற்றது.
Sorry, no posts matched your criteria.