Tamilnadu

News April 11, 2024

தஞ்சாவூர் போலீசார் கடும் எச்சரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காவல் துறை வாகனம், ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படும் நீல, சிவப்பு நிற ஒளி விளக்குகளை முறையான அனுமதியின்றி தனியார் வாகனத்தில் பயன்படுத்தினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, தொடர்புடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது. 

News April 11, 2024

கன்னியாகுமரி அருகே கணவர் எடுத்த சோக முடிவு

image

குலசேகரம் அருகே மணலோடை புறாவிளையை சார்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி ஜெனிஷா கடந்த 26ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் மனமுடைந்த ஜெனிஸ் கடந்த 7ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 8ஆம் தேதி இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 11, 2024

தேர்தல் பாதுகாப்பு பணி ஆலோசனை கூட்டம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளது
தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 11) நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். எஸ்பி சிலம்பரசன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா முன்னிலை வகித்தனர். காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

News April 11, 2024

வாணியம்பாடி: முன்னாள் அமைச்சரின் வாகனம் சோதனை

image

வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற போது காரை நிறுத்தி மத்திய ரிசர்வ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News April 11, 2024

 குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர்

image

திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் இன்று அப்பகுதி விவசாயிகளுக்கு விவசாயம் செய்து கொள்ள குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர் தரப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இதனை பயன் படுத்தி கொள்ளுமாறு சங்கம் செயலாளர் ஆனந்தன் தகவல் தெரிவித்துள்ளார். ‌

News April 11, 2024

போடி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை

image

போடிநாயக்கனூர் ரயில்வே நிலையத்தில் இன்று சென்னையிலிருந்து கரூர், ஈரோடு, மதுரை மார்க்கமாக போடிநாயக்கனூர் வந்த ரயிலில் வந்த பயணிகளிடம் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அனுமதி இன்றி கொண்டுவரப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News April 11, 2024

தபால் வாக்குப்பதிவு: தேர்தல் அலுவலர் ஆய்வு

image

சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகர காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவும், குகை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 11, 2024

வாக்குப்பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி

image

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கு பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.

News April 11, 2024

முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

சங்கரன்கோவிலில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்களிடம் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையிலான அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 11, 2024

பழனியில் ரமலான் கொண்டாட்டம்

image

பழனி அடுத்த ஆயக்குடியில் காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக நல அறக்கட்டளை சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிர்வாக இயக்குனர் அஜ்மத் அலி தலைமையில் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு ரமலான் பண்டிகை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!