Tamilnadu

News April 12, 2024

பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் – காங்கிரஸ் வேட்பாளர்

image

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங் வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று லாஸ்பேட்டை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது எனவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டே மாதங்களில் 30 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

News April 12, 2024

மதுரையில் சூப்பர் வேலைவாய்ப்பு!

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

கள்ளக்குறிச்சியில் நீதிமன்றம் புறக்கணிப்பு

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் பிரிக்கப்பட்ட பின்பும், போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படாமல் நீதிமன்ற பணிகள் தொய்வடைந்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று முழுவதும் நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் புறக்கணித்துள்ளர்.

News April 12, 2024

அரியலூரில் சிறுத்தை பள்ளிகளுக்கு விடுமுறை

image

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்குச் சென்ற அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

News April 12, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

வத்தலக்குண்டை சேர்ந்தவர் ராஜா. இவர் ஜல்லிப்பட்டி டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது டூவீலரில் வத்தலகுண்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஏ.புதுப்பட்டி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ராஜா சென்ற டூவீலர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2024

காவல்துறை உதவி பெற ‘காவல் உதவி’ செயலி

image

தமிழ்நாடு காவல்துறை மூலம் பொதுமக்கள் காவல்துறையின் உதவியை விரைந்து பெறும் வகையில் 60 க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கூகுல் ஃப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் ஆபத்து நேரங்களில் உடனடியாக காவல்துறையின் உதவியை பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News April 12, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து 6 பேர் காயம்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (ஏப்.12) சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2024

வேலூர்: தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 12) நடந்தது. இந்த தபால் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 12, 2024

மத்திய ரிசர்வ் போலீஸ் படை கொடி அணிவிப்பு

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து தொகுதிகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதை முன்னிட்டு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.தேவனூர் ஊராட்சியில் அழகன் நல்லூர் காவல் நிலைய உதவியாளர் லியோ சார்லஸ் தலைமையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

News April 12, 2024

மழை விவரம்: நெல்லை ஆட்சியர் அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.12) காலை வரை மாவட்டம் முழுவதும் 415 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை மந்தமாக காணப்படுவதால் இன்றும் மழை நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

error: Content is protected !!