Tamilnadu

News April 12, 2024

தபால் வாக்களிக்கும் தேதி அறிவிப்பு

image

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் (ம) காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு தபால் வாக்களித்திட விண்ணப்பித்தவர்களுக்கு ஆட்சியரகத்தில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு வரும் 13ஆம் தேதி அன்றும், இதர அரசுத்துறை அலுவலர்களுக்கு 14, 15ஆம் தேதிகளிலும் தபால் வாக்களிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 12, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

சிறுத்தையை பிடிக்க 22 இடங்களில் கேமரா

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டுபிடிக்க செந்துறை, பொன்பரப்பி, சிதளவாடி, உஞ்சினி, முந்திரி காடு ஆகிய 22 இடங்களில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது. சிறுத்தையை பிடிக்க மயிலாடுதுறையில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 12, 2024

மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

சோடியூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலாஜி (19). இவர் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி விழாவில் பங்கேற்க நேற்று ஒத்திகையில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2024

தஞ்சை பகுதிகளில் மழை

image

தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த வேலையில் இன்று (12.04.2024) காலை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் தேர்தல் வேலையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 12, 2024

செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு

image

சென்னை அடையாற்றில் உள்ள சஞ்சு கால்நடை மருத்துமனையில் செல்லப் பிராணிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நாளை(13.04.24) (ம) நாளை மறுநாள்(14.04.24) நடைபெறவுள்ளது. இம்முகாம் அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில் சருமப் பரிசோதனை, முடி, தோலின் மேற்பகுதி ஆகிய பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், செல்லப்பிராணிகள் வைத்துள்ளவர்கள் 93550 53890 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News April 12, 2024

காஞ்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் மாநகரில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

News April 12, 2024

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் இன்று காலை 5 மணி அளவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் நந்தி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த மோகன் சாரி என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,17,900 யை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 12, 2024

முதியவரை கல்லால் தாக்கிய மூதாட்டி

image

திருப்புவனம் அருகே பழையனூரை சேர்ந்த ராஜ்(70), ஈஸ்வரி(65), இவர்களுக்குள் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.11) ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜ்(70) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பழையனூர் போலீசார் ஈஸ்வரியை(65) கைது செய்து விசாரிக்கின்றனர்.

News April 12, 2024

கலவை: நடிகர் வாசு விக்ரம் வாக்கு சேகரிப்பு

image

ராணிப்பேட்டை, கலவை பேருந்து நிலையத்தில் திரைப்பட நடிகர் வாசு விக்ரம் திமுக அரக்கோணம் மக்களவை தேர்தல் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சார நிகழ்வில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!