India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நெடும்பலம் பகுதியில் உள்ள சோடா கம்பெனியில் சோடா தயாரித்து கொடுத்து அங்கு வேலை பார்த்தவர்களிடம் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழகம்-கேரளா எல்லை பகுதியான குமுளி பகுதியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்.14) காலை 11 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் நேற்று (ஏப்.13) அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வெள்ளிதிருப்பூர் பகுதியில், நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, தாம்பூல தட்டில் தேர்தலுக்கான அழைப்பிதழை வைத்து, கட்டாயம் வாக்களிக்குமாறு வாக்காள பெருமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பத்தூர், தர்மபுரி சாலை குனிச்சி கிராமத்தில் நேற்று இரவு 8 மணியளவில் தேர்தல் அலுவலர்கள் தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கோவிந்தசாமி மகன் பூபதி என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.100000 பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய பாதுகாப்பு படை போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்படி நேற்று செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்திரவின் பேரில் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் மீஞ்சூர் அரியன் வாயல், பஜார் வீதியில் அணிவகுத்து சென்றனர்.
கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகந்தாங்கல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை குழுவின் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தார். பறக்கும் படை குழுவினர்கள் வாகன தணிக்கை ஈடுபட்டு வரும் குறிப்பேடுகளை ஆய்வு செய்தார். சந்தேகத்திற்கு இடமாக செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் நேற்று செலுத்தினார்.
ராமநாதபுரத்தில் லயன்ஸ் கிளப் ஆப் இண்டர்நேஷனல் சார்பில் மன்னர் சேதுபதி மண்டல மாநாடு அதன் தலைவர் சீனிவாசலு தலைமையில் தனியார் மகாலில் நடந்தது. இம்மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்படி செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார்க்கு சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.