India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் முறையான முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் வெளியிட விரும்புவோர் வரும் 17ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. நேற்று மாலை வானம் கருமேகம் சூழ்ந்து சற்று நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. கோடை நேரத்தில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் இன்று உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சக்திவேல் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக நேற்று சமூக ஆர்வலர்கள் க.முனிவேல், ஆதிமூலம், ஆகியோர் தருமபுரி நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; 1000000 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பிரச்சாரம் செய்கிறோம் என்றனர்.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்று இரவு 8 மணிக்கு
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்தி ப சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “தமிழ்நாட்டின் உரிமைகளை பறி கொடுத்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி துணையாக இருந்தார்” என பட்டியலிட்டு தெரிவித்தார்.
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசாமி இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நேற்று முன்தினம் தங்க கருட வாகன வீதியுலா மற்றும் ஓலைசப்பரம் நடந்தது. நேற்று மேட்டு தெரு, வியாசராயர் தெரு, பத்மநாபன் தெரு, பாட்ராச்சார் தெரு ஆகிய பகுதிகளுக்கு பல்லக்கு வீதி யுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் புலியூர், எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே மாநகராட்சி மண்டலம் 3-க்கு விநியோகிக்கப்படும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வார்டு எண் 15, 16, 38, 39, 40, 41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் ஏற்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. இதை ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் SP கிரண் ஸ்ருதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தனது வாக்கினை பதிவு செய்தார்.
Sorry, no posts matched your criteria.