Tamilnadu

News April 14, 2024

திருச்சி: திமுக பிரமுகர்கள் கைது

image

திருச்சி இபி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி , திமுக வார்டு செயலாளர் உட்பட மூன்று பேர் அங்கு திமுக கொடியையும் வேட்பாளரின் சின்னத்தையும் உரிய அனுமதி பெறாமல் கட்டிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதி மீறல்களை, மீறியதாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 14, 2024

அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க முத்தரசன் புகார்

image

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார். விதிகளை மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறி செயல்படும் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

27 ஆம் ஆண்டு பால் குட திருவிழா

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 27 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா பால்குடதிருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்கள், காவடி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

News April 14, 2024

மழை அளவு வெளியிட்ட ஆட்சியர்

image

நெல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்.14) காலை வரை மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்றும் தொடர்ந்து வானிலை மந்தகமாக காணப்படுவதால் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

News April 14, 2024

60% கீழ் வாக்குப்பதிவான இடங்களில் சிறப்பு கவனம்

image

வரும் மக்களவைத் தேர்தலில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக 60% க்கும் கீழ் வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் 100% வாக்களிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தி வெளியிட்டுள்ளார்.

News April 14, 2024

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

image

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நெஇந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

நரிக்குறவர் இன மக்களுக்கு ஸ்வீட்

image

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் நரிக்குறவர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு வழங்கி வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.

News April 14, 2024

முதலமைச்சரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி

image

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்ப் புத்தாண்டு தமிழா் வாழ்வோடு ஆழமாக வேரூன்றியுள்ள பாரம்பரிய கலாசாரப் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்கூறும் உன்னதப் பண்டிகை. பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்விலும், நிறைந்த வளம், மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News April 14, 2024

சிங்காரவேலவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. அதன் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் இன்று காலை 6:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

News April 14, 2024

வேலூர்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

image

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின்134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!