India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் உள்ள 2-வது மாடியில்
இருந்து விசாரணைக்காக வந்த கைதி திருமூர்த்தி என்பவர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போளூரில் உள்ள திமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில், இன்று (15.04.2024), பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வே.கம்பன் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜான்சிராணி பாளையங்கோட்டை பகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்த போது அவருக்கு பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் பர்கிட் மாநகரத்தில் 9ம் வகுப்பு மாணவன் சுரேஷ் ஆனந்த் வேட்பாளர் பெயர் பொறிக்கப்பட்ட மரத்தில் செய்த இரட்டை இலை சின்னத்தை கொடுத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு வேட்பாளர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் சிறுகனூர் பகுதியில் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் எல்.ரெக்ஸ், தேர்தல் பொறுப்பாளர் பஜார் மைதீன் கலை பிரிவு ராஜீவ் காந்தி சிந்தை ஸ்ரீராம் வினோத் புருஷோத்தமன் மற்றும் பலர் உள்ளனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருவராஜபாளையம் பகுதியில் நேற்று அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொண்டார். இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் ஏ.சி.சண்முகம் உட்பட 10 பேர் மீது வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்புவனத்தில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில், மதுரை கொடிக்குளம் அலெக்ஸ் பாண்டியன் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
யுகாதி அன்று விடுமுறை என்பதால் வசூலான பணம் ரூ.7,50,000 தலைமறைவானார். நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து மதுரை கீரைத்துறையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்து, பணம் மற்றும் 3 கிலோ கஞ்சாவை இன்று கைப்பற்றினர்.
மக்களவைத் தேர்தலையொட்டி பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார், தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க், நேற்று ஆய்வு செய்தனர்.
சர்வதேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே உள்ள பாரதி பூங்காவில் திருநங்கைகள் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினர். திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல்-14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.