Tamilnadu

News January 5, 2026

தேனி: துணியால் கழுத்து இறுகி.. சிறுமி உயிரிழப்பு

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 8 வயது மகளான கவின்யா நேற்று (ஜன.4) அவரது தாயாரின் சால் துணியால் தூரி கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென துணி சிறுமியின் கழுத்தில் இறுக்கிய நிலையில் அவர் மயக்கம் அடைந்தார். சிறுமியை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 5, 2026

சிவகங்கை மக்களே.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..

image

சிவகங்கை மாவட்டம் வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி – தாம்பரம் (ஏசி) எக்ஸ்பிரஸ் (06054-06053), 2 வது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலயங்கள் வழியாக ஜன-13 முதல் 21 ந்தேதி வரை இரு மார்க்கமும் இயக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு வசதியாக இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 5, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜன. 6) செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் முழு நேர கிளை நூலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏ நிவேதா எம் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

News January 5, 2026

குமரி: 40 பவுன் திருட்டு! வேலைக்கார பெண் பலே சம்பவம்!

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த செல்லத்துரை (73) என்பவருடைய வீட்டில் 40 பவுன் தங்கம், ரூ.30,000 பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதில் 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வேலை பார்த்த பிரேமா (46) என்ற பெண்ணை போலீசார் விசாரணை செய்தனர். இதில், செல்லத்துரை வீட்டின் பீரோவை சரிவர மூடவில்லை என்பதும், அதனை கவனித்த பிரேமா, 40 பவுன் நகையை திருடிவிட்டு வேலையை விட்டு நின்றது தெரியவந்தது.

News January 5, 2026

நீலகிரி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று, பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இரண்டாம் நாளாக இன்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அந்தந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களின் வாயிலாக தவறாமல் ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

News January 5, 2026

ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.. இறைச்சிக்காக ஆமை வேட்டை.!

image

கீழக்கரை சில்வஸ்டர் 52, சத்யராஜ் 40, பாலமுருகன் 35, முனியசிவா 33, நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று வலையில் சிக்கிய இரு அரிய வகை பச்சை கடல் ஆமைகளை பிடித்து இறைச்சிக்காக கொன்றனர். ரோந்து வந்த வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமையை கொன்ற 4 பேரையும் கைது செய்து, தலா 50, 35 கிலோ எடை கொண்ட ஆமைகளை பறிமுதல் செய்தனர்.

News January 5, 2026

விழுப்புரம்: இன்றே பன்னலான கை நழுவும்!

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

காஞ்சி: இன்றே பன்னலான கை நழுவும்!

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

செங்கை: இன்றே பண்ணலனா கை நழுவும்!

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!