India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே சேலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.15) 103.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மதிய நேரத்தில் வெப்பத்தை தவிர்க்க பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஆன்லைனில் பல்கலை. செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த எவ்வித பிரச்சனைகளும் இல்லை. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான பாடப்பிரிவுகள் இணையதளத்தில் பதியவில்லை என தெரியவந்துள்ளது. விடுபட்ட அந்த பாடப்பிரிவுகளை இணையதளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது பார்வையாளர் முன்னிலையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
நாகை: தேர்தலின் போது வாக்குசாவடிகளில் பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசகூடாது,
வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கனிவுடன் பதில் கூற வேண்டும். கோபமான வார்த்தைகளால் வாக்கு மையத்தில் பிரச்சனை எழுந்து விடாமல் போலீசார் பணியாற்ற வேண்டுமென நாகை போலீஸ் எஸ்.பி ஹர்சிங் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஏப்ரல் 15) ராமநாதபுரம் அரண்மனை முன்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அமமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் டாக்டர் ஜே.ஆர்.பி.மணிகண்டன், அமமுக நகராட்சி கவுன்சிலர் தனபாண்டியம்மாள் ஆகியோர் வேல் வழங்கி வரவேற்பளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் ஊராட்சி குளத்தூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பாண்டவர்கள் சமேத ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மகாபாரத கதை பாடப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வரும் 22 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது
புதுகை மாநகர் பகுதிகளில் பல்வேறு வார்டுகளில் திமுக தலைமையான இந்தியா கூட்டணி திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோவிற்கு இன்று (ஏப்ரல் 16)தீப்பெட்டி சின்னத்தில் புதுகை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது ஒரு தேநீர் கடையில் வடை சுட்டு நூதன முறையில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியினர் ,பொதுமக்கள் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப்.16) காலை வரை மொத்தமாக 275.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (ஏப்.16) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் பாபநாசம் பகுதியில் அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 17 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 18 ஆம் தேதியில் 10124 சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.