India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை உதவி கூட்டுறவு அலுவலர் பூங்காவனம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, ரூ.75 ஆயிரத்து 880 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் டிரைவர் மேல்நிலைப்பட்டியை சேர்ந்த செல் வத்திடம் விசாரித்த போது, அந்த கார் அரிமளம் ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
தஞ்சை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வரும்
மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார். ஏதேனும் குறைகள் இருந்தால் Saksham–Eci செயலி மற்றும் 1950 வழியாக பதிவு செய்து தீர்வு பெறலாம் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று ஏப்.19ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், 04575-240521 மற்றும் 98941 60047 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த பேராவூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (53) என்பவர் அவரது வீட்டில் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற கிளியனூர் போலீசார் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர். முருகனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் சாராயத்தை கலால் துறையில் ஒப்படைத்தனர்.
மதுரையில் இன்று 16.04.2024) மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில்
சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்திடவும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆரணியை சேர்ந்த கார்த்திகேயன்(54), நேற்றிரவு பைக்கில் தனது உறவினரான சசிகலா (37) என்பவருடன் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினார். அப்போது கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர் ஓட்டி வந்த பைக் மீது உரசியதில், பைக் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலா சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஓசூர், கேசிசி நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் வழங்காத காரணத்தால், பல்வேறு தரப்பு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், பேரூராட்சி நிர்வாகத்திலும் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அப்பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என தங்களது வீடுகளில் பதாகைகளை வைத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு அன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல்.19 ஆம் தேதி வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாஜக, நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒரு சவரன் நகை ஒரு லட்சமாக உயர வாய்ப்புள்ளது” என கூறினார்.
தேனி மக்களவை தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.