India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

ராமநாடு மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள வேண்டுமா..? அரசின் நமது மாவட்ட இணையதளத்தில் பகுதி, கிராம வாரியாக BDO எண்கள் மட்டுமின்றி முக்கியமான நிர்வாகங்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனே <

தூத்துக்குடி அருகே கூட்டுக்காரன்காடு பஞ்சாயத்து மங்களகிரி தனியார் பள்ளியில் நாளை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன.5) “உன் வாழ்க்கை உன் கையில் பயணத்தின்போது சீட் பெல்ட் மறவாதீர், வேகம் வாழ்க்கையை குறைக்கலாம் சீட் பெல்ட் வாழ்க்கையை காப்பாற்றும்,” என மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 2025ல் ரேஷன் அரிசி கடத்தியது பதுக்கி விற்பனை செய்தது என 364 வழக்கு பதிந்து சம்பந்தப் வழக்குகளில் 364 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அபராதம் மூலம் ரூ.18 லட்சத்து 72100 வசூல் செய்யப்பட்டுள்ளது என குடிமை பொருள் குற்றப்புலனாய்புத்துறை தெரிவித்துள்ளது.

கடையநல்லூரில் பழைய டூவீலர் விற்பனை கடை நடத்தி வருபவர் முகமதுஅன்வா்ஹாஜா. இவா் வியாபாரம் தொடா்பாக வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியை கிளிக் செய்துள்ளார். இதனால், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.21 லட்சம் திருடு போனதாக தெரிகிறது. இதுகுறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதன் பெயரில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என பெயர் இல்லாமல் இருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த மாதம் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சிவா மற்றும் மேலும் ஐந்து பேர் மீது சாயல்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை: மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.