India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான நாளை அனைவரும் ஓட்டளிக்க வசதியாக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்திற்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 மக்களவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு மண்டல மாவட்டங்களில் 20,500 போலீஸாா் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்” என தெரிவித்தார்
கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கோவை மாவட்டத்தில் மக்களவை தோ்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன்பின், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என அனைத்து கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசாரத்துக்காக வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மண்டல வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா இன்று (ஏப்ரல் 18) தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் கோபி உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உதகை பிரிக்ஸ் பள்ளி அரங்கில் நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு சையத்பாஷா தர்காவில் நாளை துவங்க இருந்த உருஸ் திருவிழா, நாடாளுமன்ற தேர்தலால் வரும் 21ஆம் தேதி துவங்க உள்ளது. அதன்படி 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து ஜமாத் கமிட்டியினர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் சந்தனகுடம் மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதியில் ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். அங்கு ராமநவமி வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அனைத்து ஓட்டு சாவடிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனை முன்னிட்டு நெல்லை, பாளை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை நடந்துவருகிறது. முக்கிய இடங்களில் உள் மாவட்ட போலீசார், வெளிமாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் மே 7 ஆம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (ஏப்.17) வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
கடலூரில் தொழிலாளர்களுக்கு நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
Sorry, no posts matched your criteria.