India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் சதீஷ்குமார், தான் ஓட்டளித்த சீட்டை வேட்பாளர் படங்களுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் படி, காளையார் கோவில் போலீசார், சதீஷ்குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருமுல்லைவாயல் அடுத்த தென்றல் நகரைச் சேர்ந்தவர் மஞ்சு, சித்தாள் வேலை செய்துவருகிறார். இவர், நேற்று திருமுல்லைவாயல் அருகேயுள்ள எழில் நகரில் உள்ள புதிய கட்டடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது
கட்டுமானத்திற்கான கம்பி எடுத்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக, சாலையில் உள்ள மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே மஞ்சு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ் புத்துப்பட்டு காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35), ஓட்டல் ஊழியர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுதால் , இவர் புதுச்சேரி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீசார் நேற்று இரவு அவர் வீட்டுக்குச் சென்று 400 மதுபாட்டில்கள், 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஒரு வித்தியாசமான மக்களவைத் தொகுதி. இங்கு 1980, 1984, 1991 என ஹாட்ரிக் வெற்றிபெற்று மக்கள் தலைவனாக வலம்வந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி (காங்.). 1991 நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, காவிரி பிரச்சனையால் கலவரம் வெடித்தது. தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாத வாழப்பாடி தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார்.
தமிழ்ச்சங்கம் வளர்த்த நகரம் நம் மதுரை. அத்தகைய நமது மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் என 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில், மதுரை தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூரும், தேனியில் உசிலை, சோழவந்தானும், விருதுநகரில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.
புதுவை வாக்குச்சாவடி கண்காணிப்பு பணியில் 1,600 போலீசாரும், பாதுகாப்பு பணியில் 3,000 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை(ஏப்.19) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்கும் வரை அனுமதி அளிக்கப்படும்.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சனா வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் திறக்கப்பட்டு 288 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் வாகனங்களுடன் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டுள்ளனர்.
கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று(ஏப்.17) ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று(ஏப்.18) இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாள் விடுமுறை என்பதாலும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழநி அருகே மேல்கரைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் இன்று தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்தவர்கள் மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரிவீதி வலம் வந்தனர்.
Sorry, no posts matched your criteria.